திருடன் பிடிபட்டான்… ரஜினி மகள் வீட்டில் 4 வருஷமா கைவரிசை காட்டியவர் கைது!

Author: Shree
21 March 2023, 5:54 pm

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் என பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடு போனதாக ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் தன் வீட்டில் வேலை பார்க்கும் மூன்று பேர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக அந்த புகாரில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தீவிர தேடுதல் விசாரணைக்கு பின் கணவன் மனைவி என ஜோடி திருடர்கள் பிடிபட்டுள்ளனர்.

ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்து வரும் ஈஸ்வரி என்பவர் தன் கணவரின் உதவியுடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மூன்று வீடுகள் மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ் போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் தான் நடிகைகளை வைத்து இருக்கிறார்.

இது பணிப்பெண் ஈஸ்வரிக்கு தெரியுமாம். அவர் அங்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். ஈஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக சிறுக சிறுக தன் கணவரின் உதவியுடன் நகைகளை கொள்ளையடித்து அதை பணமாக மாற்றி செலவழித்து வந்துள்ளனர்.

ஈஸ்வரியின் வங்கி பரிவர்த்தனை மூலம் அவரது வங்கிக் கணக்கில் அடிக்கடி பணம் புழங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் தான் குற்றவாளி என்பதை போலீசார் நிரூபித்துள்ளனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 463

    0

    0