வெறித்தனம் ஓவர்லோடு… AK 62வில் அஜித்தை மிரட்டப்போகும் பிரபல பாலிவுட் நடிகர்!

Author: Shree
20 March 2023, 5:55 pm

அஜித்துக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்!

பல்வேறு பிரச்னைகளை தாண்டி அஜித்தின் 62 படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. மகிழ்திருமேனி இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது. இப்படத்தில் அஜித் அதிரடி போலீஸ் ஆபீஸராக நடிக்கவுள்ளர் என்று ஏற்கனவே தகவல்கள் கசிந்தது.

இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் ஸ்டார் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கப்போவதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் லியோ படத்தில் பாலிவுட் வில்லன் சஞ்சய் சத் நடித்து வரும் நிலையில் அவர்களுக்கு போட்டி போடவே அஜித் பாலிவுட்டில் இருந்து வில்லனை இறக்க சொல்லியிருப்பார் என பேசப்படுகிறது. இருந்தும் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே உறுதி செய்யப்படும்!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 604

    1

    3