கனவெல்லாம் பலிக்குதே…காதலியை கரம்பிடித்த டிமான்டி காலணி பட இயக்குனர்…திரண்டு வந்த திரைப்பிரபலங்கள்…!
Author: Selvan21 January 2025, 8:42 pm
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்பு இயக்குனராக அவதாரம் எடுத்தவர் அஜய் ஞானமுத்து,இவர் முதன்முதலில் அருள்நிதியை வைத்து டிமான்டி காலணி படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை ருசித்தார்.
அதன்பின்பு நயன்தாரா,அதர்வா,விஜய்சேதுபதியை வைத்து திரில்லர் ஆன இமைக்கா நொடிகள் படத்தை இயக்கி வெற்றி அடைந்தார்.அதன்பிறகு விக்ரமை வைத்து எடுத்த படமான கோப்ரா அவருக்கு எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்க வில்லை.இதனை தொடர்ந்து டிமான்டி காலணி இரண்டாம் பாகத்தை இயக்கி தரமான கம் பேக் கொடுத்தார்.
இதையும் படியுங்க: ஜெயிலர் 2-வில் சிவராஜ்குமாருக்கு பதில் இவரா…ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நெல்சன்..!
இப்படி பல திரில்லர் படங்களை இயக்கி வளர்ந்து வரும் நிலையில்,தன்னுடைய நீண்ட நாள் காதலியான ஷிமோனாவை சென்னையில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துள்ளார்.இவருடைய திருமணத்திற்கு நடிகர் விஷால்,விக்ரம்,இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் உட்பட பல திரைபிரபலங்கள் நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இவர் தற்போது விஷாலை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது,மேலும் நடிகை பூஜா ஹெக்கடே நடிப்பில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.இவருடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.