உன்ன நம்பி மோசம் போயிட்டேன்… விக்ரமால் நொந்துபோன இயக்குனர் – ஆதரவு கரம் நீட்டிய இளம் ஹீரோ!
Author: Rajesh30 December 2023, 5:24 pm
திரைத்துறை பின்பலமே இல்லாமல் சினிமாவில் நுழைந்து படத்திற்கு படம் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர் நடிகர் விக்ரம். இவர் தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். என் காதல் கண்மணி படத்தின் மூலம் 1990ல் அறிமுகமானார்.
அதன் பின்னர் தொடர்ந்து பல தோல்வி படங்களில் நடித்து துவண்டுபோன விக்ரமுக்கு சேது படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின்னர் காசி, ஜெமினி, தூள் , பிதாமகன் , அந்நியன் , தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
படத்திற்கு படம் தனது முழு உழைப்பை போட்டு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்திற்காக தனது இயக்குனர் எப்படி கேட்கிறாரோ அப்படி உடலை வருத்தி திறமையான நடிகராக பார்க்கப்படுபவர் விக்ரம். திரைத்துறையில் போட்டிகள் பொறாமைகள் இன்றி ஜீரோ ஹேட்டர்ஸ் என்ற பெயரெடுத்திருக்கிறார்.
இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் விக்ரம் ஆரம்ப காலத்தில் படவாய்ப்பிற்காகவும், தனது திறமையை வெளிப்படுத்தவும் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அப்போது தனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் வாய்ப்பு கேட்டு கெஞ்சியுள்ளார். பின்னர் கிடைத்த சின்ன வாய்ப்புகளை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட விக்ரம் படத்திற்கு படம் தனது திறைமையை மெருகேற்றி இன்று தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார்.
இவரை நம்பி தயாரிப்பாளர்கள் பல கோடிகள் கொட்டி படம் எடுக்க தயாராக இருக்கிறார்கள். அப்படித்தான் விக்ரமை வைத்து அஜய் ஞானமுத்து இயக்கிய திரைப்படம் கோப்ரா. சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் வெளியாகி பெருந்தோல்வி அடைந்ததோடு இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் பெரும் நஷ்டத்தை கொடுத்தது. கோப்ரா படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து அருள்நிதியை வைத்து டிமாண்டி காலனி 2 திரைப்படத்தை இயக்கிவந்தார்.
அப்போது கோப்ரா படத்தின் தோல்வியால் சுமார் 5 நாட்கள் ரூமிலே முடங்கிக்கிடந்த அஜய் ஞானமுத்துவை சந்தித்த அருள்நிதி, சாப்பிட்டீங்களா? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போறீங்க? இதுக்கெல்லாம் டவுன் ஆகிவிட்டால் எப்படி, தூக்கி போட்டு அடுத்த வேலையை புத்துணர்ச்சியோடு பாருங்க என கைகொடுத்து தூக்கி எழுப்பினராம். இதனை அப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அஜய் ஞானமுத்து மிகவும் எமோஷ்னலாக கூறினார்.