விக்ரம் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி. ஃப்ளாப் ஆன திரைப்படம் தான் “கோப்ரா”. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகியது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் இருந்து பல பிரச்சனைகளை எதிர் கொண்டு தொடர்ந்து தாமதமாகி கொண்டே சென்றது.
இதனால் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிபோக்கொண்டே இருந்தது. இப்படத்தில் நடிகர் விக்ரம் கிட்டத்தட்ட 25 விதமான தோற்றங்களில் காணப்படுவார் எனக் கூறப்பட்டதால் இந்த படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. ஆனால், படம் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்த படம் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக தோல்வியடைந்துவிட்டது.
இதை அடுத்து படத்தின் இயக்குனரான அஜய் ஞானமுத்து தற்போது டிமான்டி காலனி 2 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக இவர் இமைக்கா நொடிகள், டிமான்டி காலனி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விக்ரமுடன் கோப்ரா படத்தில் பணியாற்றி அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் என்னுடைய படம் மிகப்பெரிய தோல்வி அடைந்து விட்டது. வாழ்க்கையில் தோத்துட்டதா ஒருத்தன் கூட கூட இருக்கமாட்டான். அப்போது தான் அது எனக்கு புரிந்தது. டிமான்டி காலனி 2 படத்தின் ஷூட்டிங் எடுத்துக் கொண்டிருந்த அதே இடத்தில் தான் “தங்கலான்” படத்தின் ஷூட்டிங்கு நடந்து கொண்டிருந்தது. அங்கு விக்ரம் நடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரை பார்க்க வேண்டாம்….. டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் முடித்துவிட்டு வருவார் என எதிர்பார்த்திருந்தேன் அவரும் படத்தை முடித்துவிட்டு எங்களுடன் வந்துட்டியோடு உட்கார்ந்து பேசி எல்லாருக்கும் அப்ரிஷியேட் பண்ணிட்டு போனாரு. விக்ரம் நல்ல மனுஷன்.
ஒரு திரைப்படத்தின் தோல்வி வெற்றி என்பது அது அந்த ஒட்டுமொத்த டீமுக்கே சேரும். படத்தின் தோல்வியாக இருந்தாலும் கூட அதில் அனைவருக்கும் பங்கு உண்டு. எனவே தோல்வியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்த ஒரு நடிகர் என்றால் அது விக்ரம் தான் என்று நெருடலோடு பேசி இருந்தார் அஜய் ஞானமுத்து. அவரின் வருத்தத்தை அறிந்த ரசிகர்கள் நிச்சயம் உங்களுக்கு டிமான்டி காலனி 2 மாபெரும் வெற்றி படமாக அமைய எங்களுடைய வாழ்த்துக்கள் என கூறி வருகிறார்கள்.