எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.. புள்ள குட்டிகள பாருங்க; நடிகர் அஜித்தின் உண்மை முகம் இதுதான்..!

Author: Vignesh
8 January 2024, 1:01 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் படங்களில் நடிப்பதோடு சரி எந்த பொது நிகழ்ச்சிக்கோ, திரைப்படம் சார்ந்த விழாக்களிலோ பங்கேற்கவே மாட்டார். இதனை அவர் தனது கொள்கையாகவே பல வருடங்களாக செய்து வருகிறார். இதனை சிலர் பாராட்டினாலும் பெருவாரியான ஜனங்கள் விமர்சித்து வருகின்றனர்.

ajith-updatenews360

இந்நிலையில், விமானத்தில் இது குறித்து ஒரு நபரிடம் அஜித் பேசியிருக்கிறார். அதாவது, இன்டர்வியூ மற்றும் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்வதில்லை என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, பதில் அளித்த அஜித் ரசிகனாக இருக்கலாம் ரசிகனாக மட்டுமே இருக்கக் கூடாது என நான் நினைக்கிறேன். என் படம் வெளியாகிறது என்று அதற்கு சில நாட்களுக்கு முன்பே கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விடுகிறார்கள். அது எனக்கு மிகவும் அதிகமாக இருப்பதாக உணர்கிறேன்.

ajith-updatenews360

அப்போது, அவர்களுடைய நேரத்தை என்னுடைய படத்திற்காக செலவு செய்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்காக அவர்களுடைய நேரத்தை ஒதுக்குகிறார்கள். அப்படி செய்யக்கூடாது நான் நடிக்கிறேன் நான் சம்பாதிக்கிறேன் எனது குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். அதேபோலத்தான் அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. முதலில் அவர்களுடைய குடும்பம் குழந்தைகளை பார்க்க வேண்டும். என்னை ஒரு நடிகனாக மட்டுமே பாருங்கள். ஒரு ரோல் மாடலாக என் ரசிகர்கள் என்னை பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார். இதுவே, அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றுக் கொள்ளாததற்கு காரணம் என கூறியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ