விஜய் படத்தில் அதை எதிர்பாக்காத அஜித்… அந்தப்படத்தில் இப்படி ஒரு விஷயம் கூட நடந்து இருக்காமே.. ..!
Author: Vignesh6 January 2023, 12:00 pm
அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் மோத உள்ள நிலையில், இதுகுறித்து விஜய் என்ன சொன்னார் என்கிற தகவலை பிரபல நடிகர் கூறிய தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படமும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படமும் இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. ‘வாரிசு’ திரைப்படமும் ‘துணிவு’ திரைப்படமும் இந்த இரு படங்களிலுமே, அதிக ரசிகர்களைக் கொண்ட கோலிவுட் டாப் ஹீரோக்கள் நடித்துள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தை முதல் முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி உள்ளதாலும், விஜய் முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடித்துள்ளதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதே போல் இயக்குனர் எச்.வினோத் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படத்தை, ஏற்கனவே அஜித்தை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ள மூன்றாவது முறையாக இயக்கி உள்ளதால், கண்டிப்பாக இந்த திரைப்படம் ஹார்டிக் வெற்றி பெறும் என அஜித் ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த இரு திரைப்படங்களும் வெளியாவதற்கு முன்னதாகவே அஜித் – விஜய் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்கள்.
அஜித் மற்றும் விஜய் இணைந்து நடித்த ஒரே ஒரு திரைப்படம் தான் ராஜாவின் பார்வையிலே. இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் ரூ. 3 லட்சம் சம்பளமாக வாங்கினாராம்.
ஆனால், விஜய்யின் சமகால போட்டி நடிகரான அஜித், ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் இடம்பெறும் முக்கிய காட்சிகளில் நடித்திருந்த அஜித் சம்பளமே வாங்காமல் நடித்தது பெரும் ஆச்சிரியம் தான் என கூறப்படுகிறது.