விடாமுயற்சியை ஓரங்கட்டுங்க… அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் மாஸ் அப்டேட்!
Author: Rajesh15 January 2024, 5:54 pm
தல அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகழ் திருமேனி இயக்கிவரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இப்படத்தின் ஷூட்டிங் இடைவெளி விட்டு இடைவெளி விட்டு நடைபெற்று வருகிறது. வருகிற பிப்ரவரி மாதம் இறுதி வரை இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை இப்படத்தை குறித்த எந்த ஒரு அப்டேட்டும் பெரிதாக வராததால் அஜித் ரசிகர்கள் வேதனையில் இருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரையும் குஷி படுத்தும் வகையில் தற்ப்போது அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏகே 63 படத்தின் மாஸான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
ஆம், நடிகர் பிரபுவின் மருமகனான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் அவருடைய டீம் கலந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் முடிவில் அல்லது ஏப்ரல் மாதம் துவக்கத்தில் ஆரம்பம் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்காக அஜித் ரூ. 163 கோடி சம்பளம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை விடாமுயற்சி படத்தின் அப்டேட் எதுவும் வெளிவராததால் சோகத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு ஏகே 63 படத்தின் அப்டேட் மிகுந்த மிகிழ்ச்சியை கொடுத்துள்ளது.