அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா பிரபல இயக்குனர்.? இது மெகா கூட்டணி ஆச்சே..!

Author: Rajesh
26 June 2022, 12:25 pm

அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் வலிமை படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் விமர்சன ரீதியாக எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும், வசூல் ரீதியாக இப்படம் மிகப்பெரிய அளவிற்கு வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க, அதற்கடுத்து முருகதாஸுடன் இணைய பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அஜித் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் ஏ.ஆர்.முருகதாஸ். அஜித்துக்கு ‘தல’ என்ற பட்டம் இந்த படத்திலிருந்துதான் கிடைத்தது. இதையடுத்து அஜித்-ஏ.ஆர்.முருகதாஸ் ஜோடி இணையவே இல்லை. இடையில், அஜித்தும் ஏ.ஆர்.முருகதாஸும் ‘மிரட்டல்’ என்ற படத்தின் மூலம் இணையப்போவதாக செய்திகள் வந்தது. ஆனால், ஒருசில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தான் அஜித் – ஏர்.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தினை, உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கவுள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, அப்படி நடந்தால் அஜித்-முருகதாஸ் 20 ஆண்டுகளுக்கு பிறகு இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 602

    1

    0