RE – ரிலீசையே தெறிக்கவிட்ட தல ஃபேன்ஸ் – 17 வருடத்திற்கு பிறகும் மாஸ் காட்டிய “பில்லா”!
Author: Rajesh23 February 2024, 8:02 pm
தல அஜித்தின் சினிமா கெரியரில் மிக முக்கிய மைல் கல்லாக அமைந்த திரைப்படம் “பில்லா” 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகம் வெளியானது. இப்படத்தில் அஜித்தின் ரோல், அவரது நடிப்பு, ஸ்டண்ட் காட்சி உள்ளிட்டவை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் உருவான பில்லா திரைப்படம் ரஜினியின் பில்லா பட ரீமேக் என்றாலும் அஜித்தின் ஸ்டைலே வேற லெவலில் இருந்தது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பிஜிஎம் மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுத்தது. நமீதா, நயன்தாரா , பிரபு, ரஹ்மான்,ஆதித்யா மேனன், சந்தானம், பிரேம்ஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த படம் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் திரைப்படமாக தான் இருந்து வருகிறது. சமீப நாட்களாக மாபெரும் ஹிட் அடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆகி வருகிறது. அந்தவகையில் கமலின் ஆளவந்தான், ரஜினியின் முத்து உள்ளிட்ட திரைப்படங்கள் தியேட்டரில் மீண்டும் ரிலீஸ் ஆகியது. சமீபத்தில் காதலர் தினத்தன்று சிவா மனசுல சக்தி, 96, பிரேமம், சீதா ராமம் போன்ற படங்கள் ரீ ரிலீஸ் ஆகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது.
அந்தவகையில் அஜித்தின் பில்லா திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் இப்படம் மீண்டும் வெளியாகியிருந்தாலும் இதனை அஜித் ரசிகர்கள் புதுப்படம் போன்றே ஆரவாரங்களுடன் தியேட்டரில் வரவேற்றனர். அதன் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்ட் ஆகியுள்ளது.
ஒரு பக்கம் #Vaalee இன்னோரு பக்கம் #Billa 🔥🔥🔥🔥
— Koduva ™ (@KoduvaOffl_) February 23, 2024
All Over TN AK FANSSS Pure Domination 🥵💪
pic.twitter.com/hPuCjbbcuC