என் மூஞ்சிலேயே முழிக்க கூடாது.. அஜித்தின் உச்சகட்ட கோபத்திற்கு இதுதான் காரணமாம்..!

பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர். பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. வானிலை மோசம் அடைந்ததால் அங்கு ஷூட்டிங் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதனால், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு படக்குழுவினர் கடந்த ஜனவரி மாதம் சென்னை திரும்பிட அதன் பின்னர் ஒரு மாதத்திற்கு மேலாக விடாமுயற்சி பட ஷூட்டிங் தொடங்கவில்லை. இந்த நிலையில், நடிகர் அஜித் கடந்த வாரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனால், படப்பிடிப்பு தொடங்குவதில் மேலும், தாமதம் ஆனது. மேலும், விடாமுயற்சி படம் தொடர்பான அப்டேட் எதுவும் வெளியிடாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எதிர்பார்க்காத விதமாக அஜித்தின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியானது.

அதாவது, அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார் என தகவல்கள் முன்பே வெளியானதுதான். இந்த படத்தை தெலுங்கு சினிமாவில் பாப்புலரான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும், ஏ கே 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு “குட் பேட் அக்லி” என பெயரிட்டு இருக்கின்றனர். மேலும், பொங்கல் 2025-ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)..!

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் கைவிட போவதாக கூறப்பட்டுள்ளது. லைகாவிடமிருந்து விடாமுயற்சி படத்தை போனி கபூரின் தயாரிப்பு நிறுவனம் வாங்கிக் கொள்ளப் போவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது. திரை வட்டாரத்திலும் சமூக வலைதளத்திலும் இந்த தகவல் பேசப்பட்ட வருகிறது.

இந்த நிலையில், அஜித் மற்றும் போனிகபூர் பற்றி பிரபல விமர்சகர் அனந்தனன் ஒரு கருத்தினை தெரிவித்திருக்கிறார். அதாவது, அஜித் இனிமேல் போனி கபூருக்கு டேட் கொடுக்கவே மாட்டார் என்றும், அஜித்திடம் ஒரு கமிட்மெண்ட் கொடுத்தீர்கள் என்றால், அதில், சரியாக இருக்க வேண்டும் . அஜித் பிடிவாதமான ஒரு ஹெட் மாஸ்டர் ஒரு விஷயம் சொன்னால், ஒரு கோடு போட்டுவிட்டு அதிலேயே நிற்பார்.

மேலும் படிக்க: உடம்புல அவ்வளவு பிரச்சினை.. லாஸ்லியா இதனால் தான் இப்படி ஆனாராம்..!

அதை நீங்கள் செய்யவில்லை என்றால், உங்களை கிட்டவே சேர்க்க மாட்டார். நமக்கு ஒரு அட்வான்ஸ் தொகை கொடுத்துவிட்டு அடுத்தடுத்த செட்யூல் இருக்கும் போது ஒவ்வொரு மாதமும் ஐந்து கோடி அஜீத்தின் வங்கிக் கணக்கிற்கு போக வேண்டும். இல்லை என்றால், அந்த கம்பெனியின் மீது அக்கறை காட்ட மாட்டார். விடாமுயற்சி படத்திற்கு அதை செய்தாரா என்றால் இல்லை. அவர்கள் படம் பண்ணும் போது செட்யூல் தொகையை போனி கபூர் நிறுவனம் போடவில்லை. அதனாலேயே அவர்களை அஜித் ஒதுக்குவதாகவும், அவர் மூஞ்சிலேயே முழிக்க கூடாது என முடிவு எடுத்துள்ளதாக அஜித் மற்றும் போனி கபூர் குறித்து பிரபல பத்திரிகையாளரான அந்தணன் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

9 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

9 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

11 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

11 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

12 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

13 hours ago

This website uses cookies.