BMW காரில் 220 கி.மீ. வேகத்தில் சீறி பாய்ந்த AK… துபாய் ட்ராக்கில் பறக்கும் அஜித்தின் த்ரில் வீடியோ..!

Author: Vignesh
26 June 2024, 3:00 pm

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அதிரடி ஆக்சன் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் ஆரவ், ரெஜினா, அர்ஜுன் எனமிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

ajith-updatenews360

இப்படத்தை லைக்கா தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது, அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதற்காக, அண்மையில் அஜர்பைஜான் செல்லும் முன் அஜித் துபாய்க்கு சென்று இருந்தார். அப்போது, அவர் கார் ரேஸில் ஈடுபட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது.

ajith-updatenews360

அந்த வகையில், சற்றுமுன் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் துபாயில் கடந்த 2021 ஆம் தேதி அஜித் ரேஸ் காரை வேகமாக காரை ஓட்டும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவில், அஜித் பாதுகாப்பு உடைகள் மற்றும் ஹெல்மெட் அணிந்து கொண்டு காரை ஸ்டார்ட் செய்வதும் கார் சுமார் 220 கிலோமீட்டர் அதிகமான வேகத்தில் செல்லும் காட்சியும் உள்ளது. இந்த வீடியோ தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னதாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அஜித் நடித்துவரும் இன்னொரு படமான குட் பேட் அக்லி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக விடாமுயற்சி படப்பிடிப்பிலிருந்து அஜித் வந்ததும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்டம் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…