அரங்கமே அதிர…ஒட்டுமொத்த உலகமே திரும்பி பார்க்க…மகனுடன் மேடையை பகிர்ந்த அஜித்..!

Author: Selvan
12 January 2025, 5:20 pm

இந்திய நாட்டுக்கே பெருமை சேர்த்த AK..!

அஜித் அணி துபாய் 24Hகார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பந்தயத்தில் ஏகப்பட்ட சவால்களை எதிர்கொண்டு,துவண்டு போகாமல் அஜித் தனது அணியுடன் பங்குபெற்றார்.

இதையும் படியுங்க: நம்ம ஜெயிச்சுட்டோம் நண்பா…ஆனந்த கண்ணீரில் அஜித்…துபாய் 24H கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் அணி..!

நேற்று மதியம் ஒரு மணிக்கு தொடங்கிய இந்த பந்தயம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.இதில் அஜித்குமாரின் அணி 911 GT3 R என்ற பிரிவில் 3-வது இடத்தை பிடித்து அசத்தியது.இந்த வெற்றி மூலம் அஜித் நம் இந்திய நாட்டிற்கே பெருமை சேர்ந்துள்ளார்,அதுமட்டுல்லாமல் இனி வருங்காலங்களில் கார் ரேஸில் இந்திய நாடும் மகத்தான பங்களிப்பை அளிக்கும் என ஆணித்தரமான முத்திரையை அஜித் இந்த வெற்றி மூலம் மற்ற நாடுகளுக்கு கூறியுள்ளார்.

இந்த மகத்தான வெற்றியை அஜித் துள்ளி குதித்து,தேசிய கொடியை கையில் ஏந்தி அங்கிருந்த ரசிகர்களின் கூட்டத்தை பார்த்து நன்றி தெரிவித்தார்.மேலும் அங்கிருந்த அஜித் மனைவி ஷாலினி மற்றும் அவரது குழந்தைகள்,நடிகர் மாதவன் என பலர் அஜித்துக்கு வாழ்த்துக்களை கூறி உற்சாகம் அடைந்தனர்.

ஒட்டுமொத்த அரங்கமே AK சத்தத்தால் அதிர்ந்தது.பின்பு பரிசு வாங்க மேடை ஏறிய அஜித் அணி,பெருந்தன்மையாக தனது அணியின் மற்ற வீரர்களை முதலில் மேடை ஏற வைத்து,பின்பு அஜித் இந்திய நாட்டுடைய தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு,தனது மகனையும் அழைத்து பரிசை வாங்கினார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் கடின உழைப்பை பாராட்டி வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்,மேலும் GT 4 பிரிவில் SPRIT OF THE RACE என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.இந்த வெற்றியின் மூலம் அஜித் அடுத்து ஐரோப்பாவில் நடைபெறும் ரேஸில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.

  • lokesh kanagaraj decided to take break from social media லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?