வீழ்வேனென்று நினைத்தாயோ:விபத்துக்கு பின் மீண்டும் ரேஸில் சீறிய அஜித்…வைரலாகும் வீடியோ…!

Author: Selvan
9 January 2025, 5:38 pm

தரமான COME BACK கொடுத்த அஜித்குமார்

நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துவிட்டு,துபாயில் நடக்கின்ற கார் ரேஸுக்கு கிளம்பினார்.

அவர் அங்கே சென்றவுடன் தனது டீம் மெம்பர்களுடன் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.இதையடுத்து நேற்று முன்தினம் அஜித்,கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது,அவருடைய கார் எதிர்பாரா விதமாக அங்குள்ள தடுப்பில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இதையும் படியுங்க: நடிகர் விஜய்க்கே இப்படி ஒரு நிலைமையா…தளபதி 69-க்கு ஏற்பட்ட பெரும் சிக்கல்…!

இந்த வீடியோ இணையத்தில் உடனே வைரல் ஆகி பார்க்கின்ற அனைவரையும் அதிர்ச்சியாக்கியது.ஆனால் நல்வாய்ப்பாக அஜித் அந்த பெரிய விபத்தில் எந்த வித காயங்களுமின்றி மீண்டு வந்தார்.

இந்த படபடப்பு இன்னும் ரசிகர்கள் மத்தியில் ஓய்வதற்குள்ளே,அவர் அடுத்ததாக தன்னுடைய கார் பந்தயத்திற்கு தயாரான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அஜித்துக்கு தங்களுடைய ஆதரவுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.மேலும் அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு மீடியா முன்பு பேசிய வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!