அஜித் செஞ்ச மாஸான விஷயம்; ஆடிப்போய்ருவீங்க; சஸ்பென்சுடன் பகிர்ந்த DSP,

Author: Sudha
15 July 2024, 1:26 pm

விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் படம் குட் பேட் அக்லி.எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், குட் பேட் அக்லி படத்தில் அஜித் சார் மாஸாக ஒரு நடனம் ஆடியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார். பொதுவாக அஜித்துக்கு நடனம் வராது என்ற விமர்சனம் காலங்காலமாக இருக்கிறது, இப்போது தேவிஸ்ரீ பிரசாத் இப்படி கூறியிருப்பதால் அந்த விமர்சனத்தை இதில் ஏகே உடைப்பார் என்று அஜித்தின் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

அஜித்தின் நடனத்தை காண இப்போதே ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

  • Virat Kohli fake video அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!