இரவு பார்ட்டியில் வெளிநாட்டு பெண்ணுடன் வேறமாறி டான்ஸ்.. வைரலாகும் அஜித்தின் ரீசண்ட் வீடியோ..!

Author: Vignesh
3 January 2024, 2:50 pm

அஜித்தை காதலிக்க முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ajith_kumar

மகள் அனுஷ்கா டென்னிஸிலும் ஆத்விக் கால்பந்து விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர்கள். அவ்வப்போது அவர்கள் விளையாடும் புகைப்படங்கள் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்.

இந்நிலையில், அஜித் தன் மகள் அனுஷ்காவின் பிறந்தநாளை துபாயில் குடும்பத்தினரோடு கொண்டாடியுள்ளார். அங்கு சொகுசு Boat ஒன்றில் அஜித் தனது குடும்பத்தினரோடு செல்ல அவரின் ரசிகர்கள் அடையாளம் கண்டுபிடித்து தல தல என்று கத்தி கூச்சலிட்டனர். உடனே அஜித் அவர்களுக்கு கையசைத்து அன்பை வெளிப்படுத்தி செல்கிறார். இந்த வீடியோ தற்ப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், அஜித்தின் மகள் அனுஷ்காவின் 16 வது பிறந்த நாளை துபாயில் கொண்டாட இரவு பார்ட்டியின் போது வெளிநாட்டு பெண்ணுடன் அஜித் நடனமாடும் வீடியோ தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!