முடியவே முடியாது என மறுத்த அஜித்… வேறு வழியில்லாமல் ஜோடியை மாற்றிய இயக்குநர்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2023, 2:31 pm

தமிழ் சினிமாவின் தனது திறமையால் உச்ச நடிகராக வந்தவர் அஜித். தனது கடின உழைப்பால் இன்றும் பல கோடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவருடன் நடிக்க பல நடிகைகள் போட்டி போட்டு கொண்டு வாய்ப்புகளை தட்டி பறித்து வருகின்றனர். அண்மையில் துணிவு படம் வெளியாகி வசூல் வேட்டையாடியது.

அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2000ஆம் வருடத்தில் வெளியான அஜித்தின் திரைப்படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

இந்த படத்தில் அஜித் ஜோடியாக முதலில் நடிக்க வைத்தது ஐஸ்வர்யா ராய் தான். ஆனால் அஜித் தாடியை சேவ் செய்ய வேண்டும் என ராய் கூறியுள்ளார்.

இதையடுத்து இயக்குநர் அஜித்திடம் சொல்ல, அவர் முடியாது என மறுத்துள்ளார், பின்னர் இந்த படத்தில் நடிக்க மஞ்சு வாரியர், சௌந்தர்யா என பல நடிகைகளிடம் அணுகியுள்ளனர்.

இறுதியில் தபு, அஜித் ஜோடியாக நடிக்க, அப்பாஸ் ஐஸ்வர்யா ராய் இணை உறுதி செய்யப்பட்டது. உலக அழகியாக இருந்தால் என்ன, தன்னுடைய இமேஜை மாற்ற முடியாது என அஜித் கறாராக கூறியதால், வேறு வழியில்லாமல் இயக்குநர் ஜோடியை மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Siragadikkai Aasai Vidhya Reveal the Truth about Leaked Video மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!