அஜித் படத்திற்கு வழிவிட்ட தனுஷ்…ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு..!
Author: Selvan18 January 2025, 9:37 pm
இட்லிக்கடை ரிலீஸ் தேதி மாற்றம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ்,இவர் தற்போது பல படங்களை இயக்கியும்,நடித்தும் வருகிறார்.அந்த வகையில் இவர் இயக்கி நடித்து உருவாகி வரும் இட்லிக்கடை திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது.

இதே தேதியில் அஜித்தின் குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆக உள்ளது,இதனால் தனுஷ் அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்,இந்த நிலையில் தற்போது இட்லிக்கடை படக்குழு அஜித்தின் படம் வர உள்ளதால் அதிகமான ஸ்க்ரீன் கிடைக்காத காரணத்தினால்,இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை பெப்ரவரி 21 ஆம் தேதி முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதையும் படியுங்க: படம் ஹிட்…இனி கல்யாணம் தான்…மேடையில் நடிகர் விஷால் பர பர பேச்சு..!
மேலும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பெப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதால் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ட்ராகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை பெப்ரவரி 21ஆம் தேதிக்கு படக்குழு தள்ளி வைத்துள்ளது.அஜித்தின் அடுத்தடுத்து படங்கள் திரைக்கு வர உள்ளதால்,மற்ற படங்களின் வசூல் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.