90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!
Author: Udayachandran RadhaKrishnan31 March 2025, 1:47 pm
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம் பல விஷயங்ளை கூறியுள்ளார்.
90களில் நயன்தாரா என்று நடிகை ஹீராவை சொல்லலாம். காதல், வர்ச்சி, நடிப்பு என அனைத்திலும் திறமையான நடிகையாக வலம் வந்த ஹீரா சினிமாவை விட்டு விலகியது குறித்து பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பகிர்ந்துள்ளார்.
ஹீரா மாடலிங் துறையில் கொடி பறந்த காலம் அது. விளம்பரங்களில் நடித்த ஹீராவை சினிமாவுக்கு அழைத்துள்ளா இயக்குநர் சுபாஷ் கய்.
ஆனால் படத்தில் நடிக்க மறுத்த ஹீரா பின்னர், இயக்குநர் கதிர் வற்புறுத்தலால் இதயம் படம் மூலம் கதாநாயகி ஆனார். இதயம் படம் மூலம் பல ரசிகர்களின் இதயத்தை தொட்டவர் ஹீரா.
இதையும் படியுங்க: வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…
பின்னர் சரத்குமாருடன் 4 படங்களில் இணைந்து நடித்த அவர், கிசுகிசுவில் சிக்கினார். ஆனால் சரத்குமார் ஹீராவை காதலிப்பதாக பொதுவெளியில் சொல்லாமல் சொன்னார்.
ஒரு படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த ஹீராவிடம் பேட்டி எடுத்திருந்தனர். அப்போது பேட்டி முடிந்ததா? இல்லையா என 3, 4 முறை சரத்குமார் கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் சரத்குமார், ஹீரோக்களுடன் நடிக்க ஹீராவுக்கு கட்டளையிட்டதால், ஹீரா தனது காதலை முறித்துக் கொண்டார்.

பின்னர் அஜித்துடன் தொடர்ந்து பணியாற்றிய போது, ஹீராவின் சரளமான ஆங்கில பேச்சில் விழுந்த அஜித், காதலிக்க தொடங்கினார்.
ஹீராவும் காதலிக்க, நேரடியாக ஹீராவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் ஹீராவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்க மறுத்ததால், அஜித் பின்வாங்கினார்.

இதனால் மனமுடைந்த ஹீரா காதல் தோல்வியால் துவண்டு போனார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் ஒருவர், அஜித்திடம் இருந்து விலகிச் செல்ல வேண்டும் என காட்டமாக கூறியுளள்ர்.

காதல் தோல்வியில் இருந்த ஹீரா, சினிமாவே வேண்டாம் என ஒதுங்கியதாகவும், சபிதா ஜோசப் கூறியுள்ளார். 8 வருடம் மட்டுமே னிமாவில் இருந்த ஹீரா 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
