எந்த நடிகர் கல்யாணத்திலும் இப்படி பண்ணதில்லை… நெகிழவைத்த அஜித் – ஷாலினி ஜோடி!

Author: Rajesh
29 February 2024, 3:48 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.

ajith-updatenews360

முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அஜித் தொடர்ந்து டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். ஷாலினி அஜித்தை ஆரம்ப காலத்தில் பார்த்து பழகியது போல் இன்றும் காதலித்து வருகிறார். இந்நிலையில் அஜித் – ஷாலினியின் கல்யாணத்தில் நடந்த ஸ்வாரஸ்யமான தகவல் குறித்த செய்தி ஒன்று இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், பொதுவாக நட்சத்திர வீட்டு கல்யாணத்தில் விஐபிகளுக்கு தடபுடல் விருந்து வைக்கப்படுமாம்.

ஆனால், அவரகளின் கார் டிரைவர்களுக்கு அனுமதி கூட கொடுக்கமாட்டார்களாம். விஐபி டிரைவர்களுக்கு அந்த கல்யாண விருந்து சாப்பிட ஆசையாக இருக்குமாம். அதனால் அஜித் அதை மனதில் வைத்து விஐபிகளின் கார் டிரைவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலே அத்தனை உணவுகளுடன் பார்சல் செய்து வாட்டர் பாட்டிலுடன் கொடுத்தாராம் அஜித். இது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொடுத்ததாம்.

  • GOAT in Small Screens இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
  • Views: - 242

    0

    0