அஜித் இனி அவருக்கு Date-ஏ கொடுக்க மாட்டாரு.. பண விசயத்தில் ஏமாற்றிய தயாரிப்பாளர்..!

பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர். பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. வானிலை மோசம் அடைந்ததால் அங்கு ஷூட்டிங் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதனால், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு படக்குழுவினர் கடந்த ஜனவரி மாதம் சென்னை திரும்பிட அதன் பின்னர் ஒரு மாதத்திற்கு மேலாக விடாமுயற்சி பட ஷூட்டிங் தொடங்கவில்லை. இந்த நிலையில், நடிகர் அஜித் கடந்த வாரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனால், படப்பிடிப்பு தொடங்குவதில் மேலும், தாமதம் ஆனது. மேலும், விடாமுயற்சி படம் தொடர்பான அப்டேட் எதுவும் வெளியிடாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எதிர்பார்க்காத விதமாக அஜித்தின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியானது.

அதாவது, அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார் என தகவல்கள் முன்பே வெளியானதுதான். இந்த படத்தை தெலுங்கு சினிமாவில் பாப்புலரான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும், ஏ கே 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு “குட் பேட் அக்லி” என பெயரிட்டு இருக்கின்றனர். மேலும், பொங்கல் 2025-ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் கைவிட போவதாக கூறப்பட்டுள்ளது. லைகாவிடமிருந்து விடாமுயற்சி படத்தை போனி கபூரின் தயாரிப்பு நிறுவனம் வாங்கிக் கொள்ளப் போவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது. திரை வட்டாரத்திலும் சமூக வலைதளத்திலும் இந்த தகவல் பேசப்பட்ட வருகிறது.

இந்த நிலையில், அஜித் மற்றும் போனிகபூர் பற்றி பிரபல விமர்சகர் அனந்தனன் ஒரு கருத்தினை தெரிவித்திருக்கிறார். அதாவது, அஜித் இனிமேல் போனி கபூருக்கு டேட் கொடுக்கவே மாட்டார் என்றும், அஜித்திடம் ஒரு கமிட்மெண்ட் கொடுத்தீர்கள் என்றால், அதில், சரியாக இருக்க வேண்டும் . அஜித் பிடிவாதமான ஒரு ஹெட் மாஸ்டர் ஒரு விஷயம் சொன்னால், ஒரு கோடு போட்டுவிட்டு அதிலேயே நிற்பார்.

அதை நீங்கள் செய்யவில்லை என்றால், உங்களை கிட்டவே சேர்க்க மாட்டார். நமக்கு ஒரு அட்வான்ஸ் தொகை கொடுத்துவிட்டு அடுத்தடுத்த செட்யூல் இருக்கும் போது ஒவ்வொரு மாதமும் ஐந்து கோடி அஜீத்தின் வங்கிக் கணக்கிற்கு போக வேண்டும். இல்லை என்றால், அந்த கம்பெனியின் மீது அக்கறை காட்ட மாட்டார். விடாமுயற்சி படத்திற்கு அதை செய்தாரா என்றால் இல்லை. அவர்கள் படம் பண்ணும் போது செட்யூல் தொகையை போனி கபூர் நிறுவனம் போடவில்லை. அதனாலேயே அவர்களை அஜித் ஒதுக்குகிறார். அஜித் மற்றும் போனி கபூர் குறித்து பிரபல பத்திரிகையாளரான அந்தணன் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

8 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

8 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

9 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

9 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

10 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

10 hours ago

This website uses cookies.