நீ நடிக்க போ… நான் வண்டி ஓட்டப்போறேன் – விஜய் உடன் போட்டிப்போட கூட விரும்பாத அஜித்!

Author: Shree
14 May 2023, 3:31 pm

தமிழ் சினிமாவின் இரு துருவங்களான அஜித் – விஜய் இருவரும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு மிகப்பெரிய நட்சத்திர நடிகர்களாக இருந்து வருகிறார்கள். இவர்களது திரைப்படங்கள் ஆரம்பகாலத்திலே எதேர்ச்சியாக ஒரே நேரத்தில் வெளியாக அவரவர் ரசிகர்கள் இரு பிரிவினராக பிரிந்து படம் பார்க்க ஆரம்பித்தனர். அப்போது ஆரம்பித்தது தான் இந்த போட்டி.

ஆனால், நிஜ வாழ்க்கையில் அஜித் விஜய் இருவருமே போட்டிகள் இன்றி பொறாமை இன்றி அவரவர் தங்களது வேலைகளை செய்துவந்தாலும் அவரது ரசிகர்கள் யாரும் சும்மா இருப்பதில்லை. இருவருக்குள்ளும் தொடர்ந்து பிரிவினை ஏற்பட்டு வந்தது. ஒரே நேரத்தில் இவர்கள் படங்கள் வெளியானது வணிக ரீதியாக படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொட்டியது.

இதனால் இப்படியே இருக்கட்டும் என போட்டிப்போட்டுக்கொண்டு ஒரே நாளில் படங்கள் வெளியாகும். இதனை விஜய் போட்டியாகவே பார்த்து வருகிறாராம். அதனால் தான் அஜித்தை பீட் செய்து முன்னுக்கு செல்லவேண்டும் என விஜய் தனது படங்கள் வெளியாகும் போதெல்லாம் கோடிக்கணக்கான ரசிகர்களை அழைத்து ஆடியோ லான்ச் விழாவில் கலந்துக்கொண்டு தத்துவம் பேசி வருகிறார். ஆனால், அஜித் ஒரு படத்தை முடித்ததும் ஹிட் ஆகுது ஆகல என அதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல் பைக் எடுத்துக்கொண்டு ட்ரிப் அடித்து வருகிறார். இதன் மூலம் அஜித் தான் போட்டிகள் , பொறாமைகள் இன்றி இருந்து வருகிறார் எனபது தெரியவந்துள்ளது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 869

    4

    4