ஸ்பீடுனு தெரியும்… ஆனா, இது செம கூலா இருக்கே…! நடிகர் அஜித் கார் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரல்..!

Author: Vignesh
17 February 2023, 11:39 am

கடந்த 11ம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவந்த துணிவு திரைப்படம் மக்கள் மத்தியில், அமோக வரவேற்பினை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது. எச். வினோத் – அஜித் கூட்டணியில் மூன்றாவது வெளிவந்த இப்படம் வசூலில் தொடர் சாதனைகளை புரிந்து வருகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவிலும் எதிர்பார்த்ததை விட வசூல் குவித்து வருகிறதாம் துணிவு. இந்நிலையில், வேதாளம் படத்திற்கு பிறகு கேரளாவில் அஜித்துக்கு ஹிட் படமாக துணிவு அமைந்துள்ளது.

Ajith - Updatenews360

இந்நிலையில், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமான அஜித் தனது ஒவ்வொரு செயல்கள் மூலமாக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அஜித் படங்கள் நடிப்பது மட்டுமே தனது வேலை என்று இல்லாமல் புதுபுது விஷயங்களில் தனது கவனத்தை செலுத்த கூடியவர்.

சமைப்பது, பைக், கார் ரேஸ், தோட்டம் அமைப்பது, போட்டோ கிராபி, துப்பாக்கி சுடுதல், பைக்கில் உலகம் சுற்றிவது என பிஸியாகவே இருப்பார்.

Ajith Nayan - Updatenews360

இந்நிலையில், ஸ்காட்லாந்தில் அஜித் கார் ஓட்டும் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். அதோடு அஜித் செம கெத்தாக கார் ஓட்டுகிறாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து உள்ளனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!