இதுக்குமேல என்ன வேணும்…விடாமுயற்சி COMING SOON…துபாயில் அஜித் சொன்ன தகவலால் வைரலாகும் வீடியோ..!

Author: Selvan
11 January 2025, 3:57 pm

விடாமுயற்சி ரிலீஸ் தேதி குறிச்சாச்சு

நடிகர் அஜித் தற்போது துபாய் 24H கார் ரேஸில் தனது டீமுடன் கலந்து கொண்டு பந்தயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.இதனால் சமூக வலைத்தளங்கள் முழுவதும் அஜித் கார் ரேஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது.

நேற்று நடந்த சுற்றில் அஜித் டீம் 7-வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதியானது.இந்நிலையில் இன்று நடந்த போட்டியின் போது அஜித் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Ajith Racing Viral Video

அதில் அஜித் அங்கே இருந்த கூட்டத்தை பார்த்து UNCONDITIONAL LOVE வைத்துள்ளேன்.எப்போதும் நான் ரசிகர்களுக்கு மதிப்பு கொடுப்பவன் என கூறி,நடித்து முடித்த விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ரிலீஸ் பற்றியும் பேசினார்.இரண்டு படங்கள் நடித்து முடித்துள்ளேன்,அதில் ஒன்று ஜனவரி மாதமும்,இன்னொன்று ஏப்ரல் மாதமும் வெளியாகவுள்ளது என கூறியுள்ளார்.

ஏற்கனவே இன்றைக்கு காலையில் இருந்து விடாமுயற்சி ஜனவரி மாதம் 23-ஆம் தேதி வெளியாக உள்ளது என தகவல்கள் பரவி வந்த நிலையில்,தற்போது அஜித்தே இந்த மாதம்-னு சொல்லியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படியுங்க: UNCONDITIONAL LOVE… கார் பந்தயத்திற்கு இடையே பேசிய அஜித் : சிலாகித்த ரசிகர்கள்! (வீடியோ)

மேலும் அங்கே நடந்த பந்தயத்தின் போது அஜித்தின்”ஆலுமா டோலுமா”பாடல் ஒலித்து அங்கிருந்த ரசிகர்களை வைப் ஆக்கியது,இந்த வீடீயோவை இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய X-தளத்தில் பதிவிட்டு,அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து அஜித்தின் ரேஸ் மற்றும் சினிமா அப்டேட் வெளியாகி வருவதால் ரசிகர்களுக்கு,இந்த வருடம் ஆரம்பமே செம கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!