நாங்க ரெடி நீங்க ரெடியா..வெற்றிகரமாக முடிந்த விடாமுயற்சி டப்பிங்..பொங்கலுக்கு வெளியீடு..!

Author: Selvan
7 December 2024, 8:57 pm

நடிகர் அஜித் சினிமா மற்றும் கார் ரேஸில் தற்போது கலக்கி வருகிறார்.சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு தன்னுடைய முழு கவனத்தையும் கார் ரேஸில் செலுத்தி இருக்கிறார்.

Ajith's 2025 Pongal movie release

அவருடைய நடிப்பில் அடுத்தடுத்து விடாமுயற்சி,குட் பேட் அக்லி படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களை மகிழ்விக்க இருக்கின்றன.இந்த நிலையில் நீண்ட நாட்களாக எந்த அப்டேட்டும் வராமல் இருந்த விடாமுயற்சி சில நாட்களுக்கு முன்பு படத்தின் டீசரை வெளியிட்டு சமூக வலைத்தளங்களை திணறடித்தது.

இதையும் படியுங்க: பில்லா படத்தில் நயன்தாரா பண்ண காரியம்….போட்டுடைத்த பிரபல இயக்குனர்..!

இதனால் ரசிகர்கள் பொங்கலுக்கு விடாமுயற்சி வருமா இல்லை குட் பேட் அக்லி வருமா என்று குழப்பத்தில் இருந்து வந்த நிலையில்,விடாமுயற்சி படக்குழு தற்போது ஒரு குட் நியூஸ் வெளியிட்டுள்ளது.

Ajith's dubbing work completion

அஜித்தின் இரண்டு படங்களுடைய டப்பிங் வேலைகள் முடியாமல் இருந்ததால்,எந்த படத்திற்கு அஜித் முதலில் டப்பிங் வேலைகளை முடித்து கொடுப்பாரோ,அதுவே பொங்கலுக்கு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.

இந்த சூழலில் விடாமுயற்சி டப்பிங் பணிகள் அஜர்பைஜானில் முடிந்ததாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனால் சொன்னபடி விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு சைலன்ட் ஆக ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

  • Jayalalitha is my inspiration i will entry in politics says Varalakshmi அரசியலுக்கு வரும் பிரபல வாரிசு நடிகை… ஜெயலலிதா தான் வழிகாட்டி என பெருமிதம்!!