இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!
Author: Selvan11 January 2025, 10:05 pm
ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுத்த அஜித்
நடிகர் அஜித்குமார் தன்னுடைய கனவான கார் ரேஸில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கலந்து கொண்டுள்ளார்.இதனால் ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் துபாய் கார் ரேஸில் இருந்து அஜித் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார்.அந்த வகையில் அவர் கார் ரேஸ் என்னுடைய சிறிய வயது ஆசை,முழு ஈடுபாட்டுடன் தற்போது வந்துள்ளேன்,இதற்காக சினிமாவில் நடிப்பதை தற்போதைக்கு தள்ளி வைத்துள்ளேன் என கூறி இருந்தார்.
இதையும் படியுங்க: நீங்க அவரை கவனிச்சீங்களா…துபாய் கார் ரேஸில் நடனம் ஆடிய அஜித் பட இயக்குனர்…!
மேலும் அங்கிருந்த ரசிகர்களை பார்த்து ரொம்ப எமோஷனல் ஆனார்.இந்த சூழலில் தற்போது அஜித் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதாவது நீங்க உங்களுக்கு பிடிச்சதை பண்ணுங்க,அது எந்த துறையாக இருந்தாலும் நீங்க அத லவ் பண்ணி செஞ்சா ஒரு நாள் வெற்றி கிடைக்கும் என கூறியுள்ளார்.
Beautiful and heartful message from Ajith sir . pic.twitter.com/eyOB1oepm8
— Prashanth Rangaswamy (@itisprashanth) January 11, 2025
மேலும் படிக்குற பசங்க நல்லா படிங்க,வேலைக்கு போறவங்க கடினமா உழைங்க,நீங்க ஒரு நாள் சாதிக்கலாம்,முதல்ல உங்களுடைய குடும்பத்தை பாருங்க,உங்க குடும்பத்துக்கு தேவையானதை பண்ணி அவுங்க கூட சந்தோசமா இருங்க,ரசிகர்களாகிய நீங்கள் எனக்காக எப்போதும் சண்டை போடாதீங்க என அன்பு கட்டளை விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கார் ரேஸில் உள்ள சவால்களையும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே அஜித் தன்னுடைய பெயருக்கு முன்னால் எந்த வித அடைமொழி பயன்படுத்த வேண்டாம் என கூறியிருந்த நிலையில் ,தற்போது அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு மீண்டும் அறிவுரை கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.