அடேய்… என்னடா கொத்து பரோட்டா பண்ணி வச்சியிருக்கீங்க? வீரம் இந்தி ரீமேக்கை வச்சி செய்யும் நெட்டிசன்ஸ்!

Author: Shree
11 April 2023, 8:07 pm

சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். அஜித்தின் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளை கொண்டு வெளியான இப்படத்தை தற்போது இந்தியில் கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற பெயரில் ரிமேக் செய்துள்ளனர். இதில் பிரபல பாலிவுட் நட்சத்திர நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியா நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

veerm hindi remake -updatenews360

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில், ஜெகபதி பாபு, பூமிகா சாவ்லா, ராகவ் ஜூயல், சித்தார்த் நிகம், ஜாஸ்ஸி கில், வினாலி பட்நாகர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.

kisi ki bhai kisi ki jaan saman kahan

இந்த ட்ரைலரை பார்த்துவிட்டு நெட்டிசன்ஸ் அடேய் என்னடா கொத்து பரோட்டா பண்ணி வச்சியிருக்கீங்க? என கேலி செய்துள்ளனர். அதிலும் சல்மான் கானின் கெட்டப் தான் பயங்கர கேவலமாக இருக்கிறது என கூறியுள்ளார். அதில் லாங் ஹேர் வைத்து வில்லன் போன்றும் இல்லாமல், ஹீரோ போன்றும் இல்லாமல்… பார்த்தவுடன் எழுந்து ஓடிவிடுவாங்க போல என்றெல்லாம் ட்ரோல் செய்துள்ளார். குறிப்பாக இது அஜித் ரசிகர்களை கடுங்கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…