ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தங்க மோதிரம்…சென்னைக்கு படையெடுத்த மதுரை ரசிகர்கள்.!

Author: Selvan
1 March 2025, 5:32 pm

உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி இணையத்தை கலக்கி வருவதால் மதுரையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தங்க மோதிரத்தை பரிசளித்துள்ளனர்.

இதையும் படியுங்க: ‘STR 50’ கைவிடப்பட்டதா…இயக்குனர் தேசிங் பெரியசாமி சொல்லுவது என்ன.!

குட் பேட் அக்லி டீசர் வெளியான சில மணி நேரத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து லைக்குகளை அள்ளி குவித்தது,அதுமட்டுமில்லாமல் டீசரில் அஜித்தை ஆதிக் தரமாக செதுக்கியுள்ளார்,அஜித் தீனா,பில்லா படங்களின் கெட்டப்களில் வந்து மிரட்டி இருப்பார்.

இதனால் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட குட் பேட் அக்லி டீசர் வெறித்தனமாக வந்துள்ளது என உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்,டீசரை படக்குழு தமிழ் நாட்டில் உள்ள முக்கிய தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்தார்கள்,இதனால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி திருவிழா போல டீசரை கொண்டாடினார்கள்.

இந்த நிலையில் தற்போது யூடியூபில் 30 கோடி பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் NO-1ல் உள்ளது,நேற்று டீசரை பார்க்க மதுரையில் இருந்து சென்னைக்கு அஜித் ரசிகர்கள் படையெடுத்தனர்,டீசரை பார்த்து முடித்த கையோடு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 2 பவுன் தங்க மோதிரத்தை பரிசாக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மதுரை ரசிகர்களின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • suresh gopi name removed from empuraan title card and cuts in 24 places சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…