GTA -ல் துணிவு..! மிகப்பெரிய விளம்பர பேனர்கள்.. வீடியோ கேமில் படத்தை புரமோஷன் செய்த தல ரசிகர்களுக்கு நெட்டிசன்கள் பாராட்டு..!
Author: Vignesh14 December 2022, 2:00 pm
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் தனது 61வது திரைப்படமான ‘துணிவு’படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது. தற்போது, படத்திற்கான டப்பிங் வேளைகள் மும்முரமாக போய் கொண்டிருக்கிறது.
இத்திரைப்படம் வரும் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன், துணிவு படம் போட்டி போடுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தல ரசிகர்கள் படத்தை புரமோஷன் செய்ய game ஆக வடிவமைத்துள்ளனர். இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ. GTA என்னும் பிரபல வீடியோ கேமில் இருந்து தழுவப்பட்டு பின்பு எடிட்டிங் செய்யப்பட்டிருக்கிறது. தல ரசிகர்களின் இந்த திறமையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
#GTA5 #Thunivu Version ?
— Prakash (@prakashpins) December 13, 2022
Watch till end!#Ajithkumar #ThunivuPongal pic.twitter.com/tukwBTfs8r