இட்லி கடையை அடித்து நொறுக்கிய அஜித் ரசிகர்கள்… தனுஷின் நிலைமை என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2025, 5:53 pm

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பய்ங்கர எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதையும் படியுங்க: மூத்த நடிகைகள் தான் வேணும்… அடம் பிடிக்கும் இளம் நடிகர் : கதறும் தயாரிப்பாளர்கள்!

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய் உட்பட பலர் நடிக்கின்றனர். அதே சமயம் ஏப்ரல் 10ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி வெளியாக உள்ளது.

Idly Kadai Vs GBU

விடாமுயற்சி படத்தின் தோல்விக்கு பிறகு GOOD BAD UGLY படம் வெளியாக உள்ளதால் இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டுள்ளனர்.

இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் அஜித், தனுஷ் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு ஒவ்வொரு படங்களை மாறி மாறி கலாய்த்து வருகின்றனர்.

இது குறித்து மீம்ஸ்களில், இட்லி கடையை உடைப்பது போறும், இட்லி பாத்திரத்தை ஒரு கட்டையில் கட்டி மாலை போட்டு தூக்கி இட்லி கடை உடைக்கப்படும் என கோஷம் எழுப்பி மீம்ஸ் போட்டுள்ளனர்.

  • Coolie box office predictions ‘கூலி’ அடிபோலி…1000 கோடி உறுதி…சவால் விட்ட இளம் நடிகர்.!
  • Leave a Reply