பொங்கலை முன்னிட்டு ரீலிசான பிரபல நடிகரின் படத்தின் இடையில் வேறு நடிகரின் பாட்டு.. கடுப்பில் செருப்பு வீசிய ரசிகர்கள் (வீடியோ)..!

Author: Vignesh
13 January 2023, 5:30 pm

பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

9 ஆண்டுகளுக்கு பின் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகி உள்ளன. துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். வசூலிலும் இரண்டு படங்களுக்குமே கடும் போட்டு நிலவி வருகிறது.

varisu thunivu - updatenews360

இதில் வாரிசு படத்திற்கு மட்டும் சற்று கலவையான விமர்சனங்கள் வெளிவருகின்றன. வசூல் ரீதியாகவும் கடந்த இரண்டு நாட்களில் வாரிசு படத்தை விட துணிவு படம் அதிகம் வசூல் செய்துள்ளது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், சற்று அதிர்ச்சியளிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அஜித்தின் துணிவு படத்தை ரசிகர்கள் பார்க்க வந்துள்ளனர்.

ajith vs vijay updatenews360

படத்தின் இடைவேளையில் விஜய்யின் வாரிசு படத்தின் பாடல் திரையரங்கில் ஒலித்துள்ளது. இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் சிலர் தங்களுடைய செருப்பை எடுத்து திரையில் வீசி அடித்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 515

    1

    0