தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் “தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருகிறார். 1992ல் நாளைய தீர்ப்பு என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய்.
முதல் படத்தில் நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டாலும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் தந்தை இயக்கத்தில் நடித்து, அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். தற்போது இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் விஜய் விரைவில் அரசியலிலும் இறங்க உள்ளார் என சொல்லப்படுகிறது. நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத் தொகை வழங்கினார். சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இந்த விழா மேடையில் பல விஷயங்களை விஜய் பகிர்ந்துகொண்டார். விஜய் பேசியது குறித்து பலர் பாராட்டினாலும் சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.
இந்தநிலையில், அஜித் ரசிகர் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் மாணவர்களுக்கு வழங்கிய பரிசு தொகை சான்றிதழ் வாங்கிய புகைப்படங்கள் வைரலான நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு அஜித் செய்துவிட்டார் எனவும், பள்ளி மாணவர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் செய்த உதவி குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் அஜித் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு, போங்க தம்பி நாங்கல்லாம் அப்பவே பண்ணிட்டோம் என்று அஜித் ரசிகர்கள் கெத்துக்காட்டு வருகிறார்கள்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.