4 பிரபலங்களை காதலித்தும் தோல்வியடைந்த அஜித் பட நடிகை : 48 வயதாகியும் தனிமையில் வாழும் கொடுமை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2023, 5:02 pm

சினிமாவில் நடிப்பவர்கள் உடன் நடிப்பர்வர்களுடன் காதலில் விழுவது சகஜமான ஒன்றாக இருந்தாலும், அவர்களை கரம் பிடித்து வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே.

அப்படித்தான் 4 பிரபலங்களை காதலித்து கடைசியில் தோல்வியின் விரக்திக்கு சென்று தற்போத தனிமை வாழ்ந்து வருகிறார் பிரபல நடிகை.

தென்னிந்திய சினிமாவிலும் இந்தி சினிமாவிலும் க்ளாமர் குயினாக 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நக்மா. தமிழில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்த நக்மா ஒருசிலருடன் காதல், டேட்டிங் என இருந்து வந்தது அப்போதே சர்ச்சையாக இருந்தது.

அப்படி ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் நக்மாவுடன் வெளிப்படையாக கிசுகிசுக்கப்பட்டவர் கிரிக்கெட் வீரர் செளரவ் கங்குலி. 2001ல் அவருடன் தொடர்பில் இருந்தார் நக்மா.

கங்குலிக்கு ஏற்கனவே திருமணமாகியது தெரிந்தும் அவருடன் லிவ்விங் டு கெதரில் இருந்து வந்தார். பின் கங்குலி குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனையால் அவரை விட்டு பிரிந்துவிட்டார் நக்மா.

அதன்பின் தன்னுடன் ஜோடியாக நடித்த சரத்குமாருடன் ரகசிய தொடர்பில் இருந்து வந்தார் நடிகை நக்மா. சரத்குமாரின் அரம்பக்கட்ட சினிமாவில் இருவரும் ஒருசில படங்களில் நடித்த போது சரத்குமாருக்கு திருமணமாகி இருந்தது.

அதை பொருட்படுத்தாமல் நக்மா அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். பத்திரிக்கையில் இச்செய்தி கிசுகிசுக்கப்பட்டு சர்ச்சையானதால் சரத்குமாரின் குடும்பத்திற்காக நக்மா விலகிவிட்டார்.

அதன்பின் தென்னிந்தியா பக்கமே திரும்பாத நக்மா பாஞ்பூரி நடிகர் ரவி கிஷான் என்பவரை காதலித்தார். அவருடன் சில கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்துவிட்டார்.

இதைதொடர்ந்து நடிகர் மனோஜ் திவாரியுடன் தொடர்பில் இருப்பதாகவும் இருவரும் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்பட லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதெல்லாம் பொய் என்று நக்மா கூறி மறுத்தார்.

தற்போது 47 வயதாகியுள்ள நக்மா, திருணம பந்தத்தை வெறுத்து ஒதுக்கியுள்ளார். திருமணம் செய்யாமலேயே தனிமையாக தனது வாழ்க்கையை அரசியல் , ஆன்மீகத்துக்காக அற்பணித்துள்ளார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!