காதலுக்கு லஞ்சம் கொடுத்த அஜித்… பணத்தாசை பிடித்தவரா ஷாலினியின் அப்பா ?

Author: Rajesh
22 January 2024, 10:42 am

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.

முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அஜித் தொடர்ந்து டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். ஷாலினி அஜித்தை ஆரம்ப காலத்தில் பார்த்து பழகியது போல் இன்றும் காதலித்து வருகிறார். இந்நிலையில் பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அஜித் குறித்த ஒரு ஷாக்கிங் தகவலை கூறியிருக்கிறார். ஆம், அஜித்திடம் ஷாலினியின் அப்பா நீ ரூ. 1 கோடி கொடுத்தால் என் மகளை திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறேன் என கண்டீஷன் போட்டாராம். ஷாலினிக்காக அந்த பணத்தை துஷ்டம் என எண்ணி அப்படியே அள்ளிக்கொடுத்தாராம் அஜித். இந்த விஷயம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 346

    0

    0