என்னை நம்பியவர்கள் கெட்டுப் போவதில்லை… மீண்டும் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுத்த அஜித்!

Author: Shree
25 November 2023, 8:49 am

தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் இயக்குனரான விக்னேஷ் சிவன் போடா போடி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆனார். இவர் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்து இன்று சினிமாவில் ஓரளவுக்கு தனக்கான அடையாளத்தோடு இருந்து வருகிறார்.

இவர் நானும் ரௌடி தான் படத்தை இயக்கி அதில் நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைத்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து பின்னர் சில வருடங்கள் கழித்து பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டார்கள். இவர்களுக்கு உயிர் , உலக் இரட்டை மகன்கள் உள்ளனர்.

இதனிடையே விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தை வைத்து 61 படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அவரின் கதையில் அஜித்திற்கு திருப்தி இல்லை என கூறி விக்னேஷ் சிவனை விலக்கிவிட்டார்கள். அப்படத்தை தற்போது மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.

இப்படியான நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அஜித் விக்னேஷ் சிவனுக்கு மிகப்பெரிய உதவியை செய்துள்ளார். ஆம், தனது அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பை விக்னேஷ் சிவனுக்கு கொடுத்துள்ளாராம் அஜித். இதிலும் திரிஷா தான் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என செய்திகள் கூறுகிறது.

இந்தப் படத்தின் கதை விவசாயம் மற்றும் கார்ப்பரேட் சார்ந்தது. இந்த தகவல் தற்போது கோலிவுட்டில் வைரலாகி வருகிறது. என்னை நம்பியவர்கள் கெட்டுப் போவதில்லை என அஜித் இந்த வாய்ப்பை விக்னேஷ் சிவனுக்கு கொடுத்து மீண்டும் அவரின் திறமையை மக்களுக்கு எடுத்து காட்ட உள்ளார்.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!