அஜித் தங்கமானவர்… நானா இருந்திருந்தால் அப்படி பண்ணியிருக்க மாட்டேன் – கலங்கிய SJ சூர்யா!

Author: Shree
30 September 2023, 12:24 pm

வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரவைப்பவர் எஸ்ஜே சூர்யா. திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டிருக்கிறார். அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி , நியூட்டனின் மூன்றாம் விதி , இறைவி , மெர்சல் , மாநாடு , டான் , வாரிசு என பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வில்லனாக அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவரது மனதிலும் அழுத்தமாக நின்றுவிடும். தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களுக்கு பிரபலமானவராக பார்க்கப்படுகிறார். கடைசியாக பொம்மை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

எஸ்.ஜே சூர்யா சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைந்துக்கொண்டிருந்த நேரத்தில் அஜித் செய்த உதவி குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில், தயாரிப்பாளர் ஒருவரிடம் வாலி படத்தின் கதையை சொல்லி நிராகரிக்கப்பட பாண்டிபஜாரில் 12B பஸ்ஸிற்கு பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த எஸ்ஜே சூர்யாவை அவ்வழியாக காரில் சென்ற அஜித் பார்த்து என்ன இங்க நின்னுட்டு இருக்கீங்க வாங்க என அழைத்து சென்று ரெஸ்டாரண்டில் மத்திய உணவு சாப்பிடவைத்துள்ளார்.

பின்னர் அவர் காலில் தேய்ந்துபோன செப்பலுக்கு ஊக்கு போட்டிருப்பதை பார்த்து மிகவும் வருந்திய அஜித் அவருக்கு ஒரு நல்ல செருப்பு வாங்கிக்கொடுத்து என்ன கதை சொல்லுங்க என கேட்டதும் அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப்போக தயாரிப்பாளர் எஸ்எஸ் சக்கரவர்த்தியிடம் அழைத்துச்சென்று படம் ஒப்பந்தம் செய்து அதில் அஜித்தே நடித்து மாபெரும் ஹிட் படமாக்கினார்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்த sj சூர்யா, அஜித் சார் ரொம்ப தங்கமான மனசு கொண்டவர். வாலி படத்தின்போது நான் இருந்த நிலைமையை பார்த்து வேறு யாராவது இருந்திருந்தால் என் கிட்டகூட நெருங்கியிருக்கவே மாட்டாங்க. பட்டன் இல்லாத சட்டை, ஊக்கு போட்ட செருப்பு என பார்க்கவே ரொம்ப மோசமா இருந்த என்னை பற்றி அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளவே மாட்டார்.

தோல் மேல் கைபோட்டுக்கொண்டு இவர் தான் என் டைரக்டர் என எல்லோரிடமும் சொல்லுவார். அந்த இடத்தில் நானாக இருந்திருந்தால் அஜித் சார் மாதிரி பெருந்தன்மையாக நடந்திருப்பேனா என்று தெரியவில்லை. அஜித் சார் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது. அவர் தான் என்னோட வாழ்வில் விளக்கு ஏற்றி வைத்தவர். அவர் கொடுத்த வாழ்க்கை தான் நான் இப்போ இந்த இடத்தில் இருக்கிறேன் என கண்கலங்கியபடி கூறி உருக்கமாக பேசினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ