ஷாலினியை திருமணம் செய்ய மாமனாருக்கு ரூ. 1 கோடி கொடுத்த அஜித் – தீயாய் பரவும் தகவல்!

Author: Rajesh
12 December 2023, 6:11 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.

ajith shalini

முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ajith-updatenews360

அஜித் தொடர்ந்து டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். ஷாலினி அஜித்தை ஆரம்ப காலத்தில் பார்த்து பழகியது போல் இன்றும் காதலித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது அஜித் ஷாலினியை திருமணம் செய்யவேண்டும் என்றால் ரூ. 1 கோடி கொடுக்கவேண்டும் என ஷாலினியின் தந்தை பாபு டிமாண்ட் செய்ததாகவும், அஜித்தும் ஒப்புக்கொண்டு கேட்ட பணத்தை கொடுத்து திருமணம் செய்ததாக செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 399

    0

    0