மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை?.. நடிப்புக்கு EndCard போடும் அஜித்..!
Author: Vignesh31 July 2024, 5:48 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கக்கூடிய அஜித், கடந்த மார்ச் மாதம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டது அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அவருடைய மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாக அப்போது செய்திகள் வெளியானது. இதன் பின்னர், அவர் நலமுடன் இருக்கிறார் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார் என்று அவ்வப்போது அப்டேட்டுகளும் வந்தன.
இந்த நிலையில், தற்போது அஜித் கைவசம் உள்ள இரண்டு திரைப்படங்கள் ஆன விடாமுயற்சியை முடித்தபின்னர் குட் பேட் அக்லி படத்தையும் கையோடு முடித்துவிட்டு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறாராம்.
அஜித்துக்கு கடந்த மார்ச் மாதம் நடந்த அறுவை சிகிச்சையின் தொடர்ச்சியாக தான் இதுவும் நடக்கப்போவதாக கூறப்படுகிறது. மேலும், மார்ச் மாதம் நடந்த அறுவை சிகிச்சை அப்போதைய சூழ்நிலைக்கு சரி செய்துள்ளனர். ஆனால், அது முழுமையாக குணமடைய வேண்டும் என்றால், இந்த அறுவை சிகிச்சையை கண்டிப்பாக அஜித் செய்து கொள்ள வேண்டுமாம்.
எனவே, கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இந்த அறுவை சிகிச்சையை செய்ய அஜித் முடிவு செய்துள்ளார். மேலும், இந்த அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், ஒரு வருடம் ஓய்வில் இருக்கப் போகிறாராம். அதனால், அவர் படங்களில் நடிக்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒரு பக்கம் விஜய் இன்னொரு பக்கம் அஜித் என சினிமாவில் இல்லாமல் போவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு விஷயமாகியுள்ளது. அதனால், அஜித் ஆபரேஷன் எல்லாம் முடித்துவிட்டு சீக்கிரம் வரவேண்டும் என ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஒரு வருடம் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஷாக் ஆன செய்தியாகவே இருக்கிறது.