ரிலீஸ் ஆனது ‘குட் பேட் அக்லி’ தீம் மியூசிக்..ரிப்பீட் மோடில் கேட்கும் ரசிகர்கள்.!
Author: Selvan8 March 2025, 9:11 pm
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவை திணறடித்து.
இதையும் படியுங்க: ரசிகர்களின் ஆறாத வடு..25 வருடத்திற்கு முன்னாடி நடந்த சம்பவம்..பதிலடி கொடுக்குமா இந்தியா.!
கோலிவுட் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 24 மணி நேரத்தில் ஒரு படத்தின் டீசர் அதிகபட்ச பார்வையாளர்களை(32 மில்லியன்) கடந்த என்ற சாதனையை பெற்றது.
மேலும் டீசரில் அஜித்தின் மிரட்டலான காட்சிகள் மற்றும் வசனங்கள் பார்ப்பவர்களை புல்லரிக்க வைத்தது,இதனால் படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.
#GoodBadUgly theme is officially on all platforms❤️🙏🏻https://t.co/vuCHRAH8fshttps://t.co/NMD6UoNMK5 pic.twitter.com/Jj3ILSUA8G
— Adhik Ravichandran (@Adhikravi) March 8, 2025
இந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் தீமை படக்குழு அதிரடியாக வெளியிட்டுள்ளது,ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவியுள்ள இந்த தீம் மியூசிக்கை ரீபிட் மோடில் கேட்டு வைப் செய்து வருகின்றனர்.