மாமே சவுண்ட் ஏத்து..தெறிக்க விடும் அனிருத்..’குட் பேட் அக்லி’ படத்தின் முக்கிய அப்டேட்.!

Author: Selvan
29 March 2025, 9:04 pm

பாடல் ப்ரோமோ வெளியீடு!

நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10, 2025 அன்று வெளியாக இருக்கிறது.இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ்,பிரசன்னா,சுனில்,யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்க: வாய்ப்பு தாறோம் வாங்க..கமல் பெயரில் மோசடி..எச்சரிக்கை விடுத்த நிறுவனம்.!

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.ஏற்கனவே,படத்தின் முதல் பாடல் “OG சம்பவம்” வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இரண்டாவது பாடலான “God Plus You” பாடலின் ப்ரோமோ இன்று மாலை 5:50 மணிக்கு வெளியானது.இந்தப் பாடலை ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து,பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். மேலும், பாடலுக்கான வரிகளை ரோகேஷ் எழுதியுள்ளார்,மேலும் பால்டப்பா ராப் செய்துள்ளார்.

இந்த ‘காட் பிளஸ் யூ’ பாடலின் லிரிக் வீடியோ நாளை (மார்ச் 30) அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.அனிருத் பாடியுள்ள இப்பாடலுக்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!