நான் யாருனு காட்டுறேன்…நெருப்பை பற்றவைத்த ‘குட் பேட் அக்லி’ டீசர்.!
Author: Selvan28 February 2025, 8:03 pm
பட்டையை கிளப்பும் அஜித்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி இணையத்தை பற்றவைத்து வருகிறது.
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில் தற்போது அனைவரும் குட் பேட் அக்லி படத்தை மிகவும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
மேலும் பிரசன்னா,சுனில்,அர்ஜுன் தாஸ்,சிம்ரன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர், அஜித்தின் மனைவி ஷாலினியும் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: ‘குட் பேட் அக்லி’ யுனிவர்ஸ் படமா…அதை நீங்க கவனிச்சீங்களா மாமே.!
இப்படத்திற்காக அஜித் 160 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்,அவருடைய கரியரில் இதுவே அதிகபட்ச சம்பளம் ஆகும்.இப்படத்தில் உலகளவில் கேங்ஸ்டாராக அஜித் நடித்துள்ளார் என தெரிகிறது.
மேலும் குட்,பேட்,அக்லி என மூன்று கெட்டப்களில் அஜித் நடித்துள்ளார்,படத்தில் அஜித்தின் வின்டேஜ் படங்களின் மாஸ் டயலாக் மற்றும் ஒரு எவர் க்ரீன் பாடல் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜி வி பிரகாஷ்குமாரின் தெறிக்கவிடும் இசையில் வெறித்தனமாக டீசர் வெளியாகி ரசிகர்களை பூஸ்ட் ஏத்தியுள்ளது.