அஜித்தை வெறிக்க வெறிக்க பார்த்து ரசித்த தபு… ஆசையில் சீறிப்பாய்ந்த நடிகைகள்!
Author: Shree16 June 2023, 9:29 pm
தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்துள்ளவர் தபு. இந்தியிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். இவருக்கு 50 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வது பிடித்து இருக்கிறது என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
“திருமணம் செய்துகொள்வது பற்றி சிந்திக்கவில்லை, ஏன் என்றால், நடிகர் அஜய் தேவ்கானுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. இருவரும் 20 வருடங்களுக்கு மேலாக பழகி வந்தோம். என்னுடன் பழகிய நாட்களை அவர் உணர்வார். அஜய் தேவ்கானால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை’’
இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் தபு குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது அஜித்தை தபு வெறிக்க வெறிக்க பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். இதை அன்று கிசு கிசுவாக கூட நான் எழுதியிருந்தேன் என அவர் கூறியுள்ளார். மேலும் அஜித்துடன் பல நடிகைகள் நெருக்கம் காட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.