தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள நடிகர் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இரவது நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் துணிவு. தற்போது, இவர் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், இணையத்தில் இவர் நடித்து வரும் படப்பிடிப்பு தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் அஜித், ஷாலினி தம்பதியின் மகனின் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிகளை இருவரும் நேரில் கண்டு ரசித்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.
இந்த நிலையில், நேற்று சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அஜித் மற்றும் ஷாலினி செல்வது போல ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. இதையடுத்து, ஷாக்கான ரசிகர்கள், அவர் எதற்கு மருத்துவமனைக்கு சென்றார். அஜித்து என்ன ஆனது என பரபரப்பாக பேசப்பட்டது.
முதலில் நார்மல் செக் அப் என்று சொன்னாலும், விசாரிக்கையில் அவருக்கு மூளையில் ஒரு கட்டி இருந்ததாகவும், அதை 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து நீக்கியதாக இணையதளத்தில் வதந்திகள் வெளியானது.
இந்நிலையில், நடிகர் அஜித்துக்கு மூளையில் கட்டி என்பதெல்லாம் உண்மையில்லை, வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது காதுக்கு கீழே, நரம்பு வீக்கம் இருந்தது. அரைமணி நேரத்தில், அதற்கான சிகிச்சை முடிந்து, நேற்றிரவு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என்றும், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இன்று இரவு அல்லது நாளை வீடு திரும்புவார் என அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
This website uses cookies.