மாரிமுத்துவுக்கு அஜித் செய்த உதவி.. அவரே பேட்டியில் சொன்ன உண்மை..!

Author: Vignesh
8 September 2023, 2:15 pm

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிகர் மாரிமுத்து குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் மாரிமுத்து. இதில் அவர் ஆணவம், அகங்காரம் என பெண்களை அடிக்கு,அடிமைகளாக நடித்தும் ஆண்களை போன்று நடித்து மிரட்டி வந்தார் மாரிமுத்து.

இந்த சீரியலின் மாபெரும் வெற்றிக்கு மாரிமுத்து ஒரு முக்கிய நபராக பார்க்கப்படுகிறார். இந்த சீரியலை கோலங்கள் தொடரை இயக்கிய இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலை பார்க்க கோடிக்கணக்கான இல்லத்தரசிகள் நேரம் பார்த்து காத்திருந்து பார்த்து வந்தார்கள். இதில் மாரிமுத்துவின் நடிப்பு தான் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது.

நடிகர் மாரிமுத்து நிறைய திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். கடந்த சில நாட்களாக புகழின் உச்சத்தில் பிரபலமானவராக பார்க்கப்பட்டு வந்த மாரிமுத்து நீயா நானா, தமிழா தமிழா மற்றும் பல்வேறு யூடியூப் சேனல்களில் கூட பேட்டி கொடுத்துவந்தார். இந்நிலையில் யாரும் நம்ப முடியாத அளவிற்கு நடிகரும் இயக்குனரும் ஆன மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானார். டப்பிங் பணியில் இருக்கும் போதே அவர் மாரடைப்பால் உயிர் பிரிந்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது. இந்த செய்தியை கேட்டு ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டது.

marimuthu - updatenews360

இந்நிலையில், மாரிமுத்தின் மறைவிற்கு வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மறைவுக்கு முன் நடிகர் மாரிமுத்து அஜித் பற்றி பேசிய ஒரு விஷயம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அஜித்துடன் பட படங்களில் பணியாற்றி இருப்பதாகவும், என் மகன் படிக்க கேட்காமலே பணம் கொடுத்து உதவினார் அஜித் என்று தெரிவித்து இருக்கிறார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 354

    0

    0