சத்தமே இல்லாமல் உதவி செய்யும் அஜித்… குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு!
Author: Udayachandran RadhaKrishnan29 April 2025, 12:12 pm
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.
இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். X தளத்தில் அஜித் குமார் ஹேஷ்டேக்கை பறக்க விட்டனர். நேற்று இந்தியாவில் அந்த ஹேஷ்டேக் டிரெண்டானது. இதைத்தொடாந்து திரையுலகத்தினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்க: கார் விபத்தில் பிரபல பாடகி சின்னப்பொண்ணு இறந்துட்டாரா? பதறிய கனிமொழி!
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஜித்தை பாராட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அஜித்குமாரின் செல்வாக்கு சினிமாவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அவருக்கு ஏராளமான ரசகிர்கள் பட்டாளம் உள்ளனர். அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு நிகழ்வு.
வழக்கமான நட்சத்திரங்களைப் போலல்லாமல், அவர் தனியுரிமை மற்றும் எளிமையின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

சத்தமே இல்லாமல், விளம்பரம் இல்லாமல் பலருக்கு உதவி செய்து வருகிறார் அஜித், சினிமாவை தாண்டி பல நல்ல விஷயங்களை செய்பவர். ஒழுக்கம், பணிவு மற்றும் விடாமுயற்சிக்கு எடுத்துக்காடாக விளங்குபவர் அஜித் என ஜனாதிபதி புகழாரம் சூட்டியுள்ளார்.