ஆசை ஆசையா வீடு கட்டிய அஜித்.. சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய அதிகாரிகள்.. நடந்தது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2023, 10:58 am

ஆசை ஆசையா வீடு கட்டிய அஜித்.. சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய அதிகாரிகள்.. நடந்தது என்ன?

தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் அஜித் குமார். அஜித், ஏகே என்றும் அழைக்கப்படுகிறார். கடந்த ஆண்டுதான் தன்னை தல என அழைக்க வேண்டாம் என சுற்றறிக்கையை ரசிகர்களுக்கு அனுப்பினார்.

தன்னை ஏகே, அஜித், அஜித்குமார் என்றே அழைக்க அவர் கேட்டுக் கொண்டார். இவர் திருவான்மியூர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேறு ஒரு வீட்டுக்கு குடிப்பெயர்ந்தார்.

இந்த வீட்டில் நவீன காலத்திற்கு ஏற்ப பல வகையான மாற்றங்களை செய்துள்ளார். இந்த வீடு அஜித் பார்த்து பார்த்து செதுக்கியது என்றும் கூறலாம். தனது தந்தையும் இந்த வீட்டில் வசித்துள்ளார். தந்தை இறப்பிற்கு பிறகு அஜித்தின் தாயும் தற்போது அவருடன் வசித்து வருகிறார். அண்மையில் உலக சுற்றுலா சென்றிருந்தார் அஜித்.
அவற்றை எல்லாம் முடித்துக் கொண்டு தற்போது விடாமுயற்சி படத்திற்காக அஜர்பைஜானில் படப்பிடிப்புகளில் அவர் கலந்து கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் அஜித் வீட்டருகே சாலை விரிவாக்கப் பணிகளும் மழைநீர் வடிகால் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் இருக்கும் வீடுகளின் சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அஜித்தின் வீட்டுச் சுவரும் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டின் கேட் உள்பட மதில் சுவரும் இடிக்கப்பட்டுள்ளது. வீட்டருகே வெளியே பெரிய அளவில் பள்ளமும் தோண்டப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருப்பவர்கள் வெளியே சென்று வர பெரிய தற்காலிகப் பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த வீட்டு பணிகள் காரணமாக அஜித் வீட்டினர் நேரடியாக கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஈஞ்சம்பாக்கம் வீடு வெளிநாட்டு தரத்தில் ரிமோட் மூலம் இயக்குவது போல் ஹோம் டிசைனிங் செய்யப்பட்டுள்ளது. மகன், மகள் விளையாட தனி அறை, நடனம் கற்றுக் கொள்ள தனி அறை என மாற்றியமைத்துள்ளார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!