உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ‘துணிவு’ புரமோஷன்.. கத்தாரில் சம்பவம் பண்ணிய AK ரசிகர்..!

Author: Vignesh
6 December 2022, 5:35 pm

உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் கால்பந்து போட்டி நடைபெறும் நேரத்தில் அஜித் ரசிகர் ஒருவர் ‘துணிவு’ படத்தின் பேனரை காட்டிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பொங்கல் தினத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளதால் அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ajith - updatenews360

‘துணிவு’ படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் ’சில்லா சில்லா’ என்ற பாடல் வரும் 9ஆம் தேதி வெளியாகும் என நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, கத்தார் நாட்டில் தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் லீக் போட்டிகள் முடிந்து நாக்-அவுட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் காலிறுதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

ajith-----updatenewsw360

இந்த நிலையில் அஜீத் ரசிகர் ஒருவர் உலக கோப்பை கால்பந்து போட்டியை நேரில் பார்க்கச் சென்ற ‘துணிவு’ படத்தின் பேனரை வைத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘வெயிட்டிங் ஃபார் துணிவு பொங்கல்’ என்று எழுதப்பட்டிருந்த அந்த பேனரை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!