எதிர்மறை விமர்சனத்திலும் வென்று காட்டிய வலிமை.. 100-வது நாளில் வலிமை.. அதகளப்படுத்திய ரசிகர்கள்.!

Author: Rajesh
1 June 2022, 7:51 pm

நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் வலிமை. இந்த திரைப்படத்துக்கு, வெளியாகும் முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வலிமை திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால், அண்ணாத்த மற்றும் சர்கார் ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை கம்பீரமாக முறியடித்தது. தமிழ் திரைப்பட உலகில் 33 கோடி ரூபாய் வசூலித்து முதல் நாள் வசூலில் முதல் இடத்தில் இருந்த அண்ணாத்த படத்தை எதிர்பார்த்தது போலவே வலிமை ஓவர்டேக் செய்தது.

ஆனால் இணையத்தில் எதிர்மறை விமர்சனங்கள் அதிகம் பரப்பபட்டது. இருந்தாலும் வசூலில் தொடர்ந்து வசூலை குவித்து வந்தது. இந்த நிலையில், தற்போது, 100-வது நாளை எட்டியுள்ளது. இந்த நாளை ட்டுவிட்டரில் அவரது ரசிகர்கள் அதிகளப்படுத்தி வருகின்றனர்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!