REEL LIFE மட்டுமல்ல REAL LIFEலயும் அஜித் ஹீரோதான், ஜென்டில்மேன்தான் : காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி ஓபன் டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2022, 9:34 pm

துப்பாக்கி சுடுதலில் கடந்த இரண்டு வருடங்களாக அதிக ஆர்வம் காட்டி வரும் அஜித், கடந்த 27 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக அங்குள்ள ரைபிள் கிளப்பிற்கு சென்றார்.

இதை அறிந்த ரசிகர்கள் அங்கு அவரை காண குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அஜித் வருகையை அறிந்து ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றதால் ரசிகர்களை கட்டுப்படுத்தும் விதமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் ரசிகர்களை கட்டுப்படுத்துவது குறித்து அஜித்திடம் போலீசார் ஆலோசனை செய்தனர். அப்போது அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு எந்த பிரச்னையும் வர கூடாது என காவல் துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டது மட்டுமின்றி, போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளார்.

திருச்சி ரெயில் கிளப் நிகழ்வு குறித்து காவல்துறை ஆணையர் ஸ்ரீதேவி கூறுகையில், “உண்மையில் அஜித் ஒரு நைஸ் ஜென்டில்மேன் ரசிகர்கள் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது, என கூறியதோடு… நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை செய்கிறேன் எனக் கூறி ரசிகர்களை கட்டுப்படுத்த எனக்கு எல்லா ஒத்துழைப்பும் கொடுத்தார். இறுதியில் அனைத்து காவலர்களிடமும் நன்றி கூறி விடை பெற்றார் என தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் அஜித் தன்னை காண திருச்சி ரைபிள் கிளப் வாசலில், ஆயிரத்திற்கும் மேல் கூடிய ரசிகர்களை ஏமாற்ற மனமின்றி, ரைபிள் கிளப் கட்டிடத்தின் மாடிக்கு சென்று அங்கிருந்து தன்னை காண கூடியிருந்த ரசிகர் கூட்டத்தைப் பார்த்து கையசைத்ததோடு மட்டுமின்றி தம்ப்ஸ் அப் செய்து கைகூப்பி நன்றியும் தெரிவித்தார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்