கட்சி வேணாம்… கொடி வேணாம்… மன்றம் வேணா – விஸ்வரூபம் எடுத்து விஜய் ரஜினிக்கு பாடமாக இருக்கும் அஜித்!

Author: Shree
9 August 2023, 2:27 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் எந்த ஒரு பந்தாவும் காட்டாமல் மிகவும் சிம்பிளாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று மட்டுமே இருப்பார். படங்களில் நடிப்பதோடு சரி அந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட பக்கமாட்டார். அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு விளம்பரத்திலும் நடிக்கமாட்டார்.

ஆனாலும் அஜித்திற்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. அஜித் ரஜினி, விஜய்க்கெல்லாம் பெரும் பாடமாக இருந்து வருகிறார்.ஆம் , சமீப நாட்களாக விஜய் ,ரஜினிக்கு இடையில் பெரும் போட்டியே நிலவி வருகிறது. சூப்பர் ஸ்டார் படத்திற்காக இருவரும் எதிரிகளாகிவிட்டார்கள்.

ஆனால் அஜித் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்து முன்னணி நடிகராக இருந்தாலும் இது போன்ற விஷயத்துக்கெல்லாம் ஆசைப்படவே மாட்டார். விஜய் ரஜினி இப்படி போட்டிபோட்டுக்கொள்வதற்கு முக்கிய காரணமே அரசியல் தான் என சொல்லப்படுகிறது.

பல வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என எவ்வளவோ முயற்சித்தும் அவரால் முடியவே இல்லை. ஆனால் விஜய் திடீரென விஸ்வரூபம் எடுத்து உள்ள புகுந்து அரசியலில் முழு வீச்சில் இறங்கிவிட்டார். இது தான் இவர்களது போட்டிக்கு பிள்ளையார் சுழி என கூறப்படுகிறது.

இந்த விஷயத்தில் அஜித்தை வெகுவாக பாராட்டலாம். அஜித் கட்சி வேணாம்… கொடி வேணாம்… மன்றம் வேணா எதுவுமே வேணாம் என படம் மட்டும் நடித்தும் விநியோகிஸ்தர்களுக்கும் மிகப்பெரும் லாபத்தை ஈட்டித்தரும் கடவுளாக பார்க்கப்படுகிறார்.

  • taapsee pannu said to vetrimaaran that one national award is pending for her என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…
  • Close menu